திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்.. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில்.. கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மணப்பாறை, வளநாடு கைகாட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் . I.மகேந்திரன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் பி.பஞ்சாட்சரம் பங்கேற்று சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்றார். மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான R.சந்திரசேகர் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மேலும் பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் N.பொன்னுச்சாமி, மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ, ஒன்றிய கழக செயலாளர்கள் N.சேது, கண்ணூத்து S.பொன்னுசாமி, PVK.C.பழனிசாமி, N.அன்பரசன், மணப்பாறை நகர கழக செயலாளர் பவுன் N.ராமமூர்த்தி, பேரூர் கழக செயலாளர் A.திருமலை சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் SMKM.இஸ்மாயில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சண்முக பிரபாகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் KPT.அழகர்சாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் T.M.முருகன், மாவட்ட மீனவரணி செயலாளர் KCA.ஆறுமுகம், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன் அவர்கள் மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் கிளை கழக, வார்டு நிர்வாகிகள், சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.