தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடியில் முதல்கட்டமாக ரூ.17,000 கோடியில் கார் தொழிற்சாலையை அமைத்து வருகிறது வின்பாஸ்ட் நிறுவனம். ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடி ஆலை அமைய உள்ளது. பேட்டரி உற்பத்தியையும் தொடங்கி இந்தியா முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் அமைத்து உள்நாட்டு சந்தையை பிடிக்கவும் வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது.
உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.
முதல் கட்டமாக 1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.
தூத்துக்குடி வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை ஜூன் மாதத்தில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கும் . ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடி ஆலை அமைய உள்ளது.