Skip to content

கரூர் அருகே மாணவியிடம் சில்மிஷம்…. போக்சோவில் போலீஸ் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இளவரசன் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு காவல் நிலைய காவலர் இளவரசனை போக்சோ வழக்கில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வழக்கு குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இளவரசன் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின் மீண்டும் காவலர் பணிக்கு திரும்பியவர் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!