Skip to content
Home » நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் 5 ம் தேதி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்தவருடமும் முறையாக அரசு அனுமதி பெற்று இன்று நடைபெற்றுவருகிறது

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிப்படாத காளையின் உரிமையா ளர்களுக்கும் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்ககாசு, வெள்ளிகாசு, குளிர்சாதன பெட்டி, டிவி, சைக்கிள், பீரோ, குக்கர், கிரைண்டர், மிக்ஸி, கட்டில், சீலிங் பேன் போன்ற பரிசு பொருள்கள் வழங்கப்பட இருக்கின்றன.

திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600ஜல்லிக்கட்டு காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்

ஜல்லிக்கட்டு போட்டியினை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றபிறகு கொடியசைத்து துவக்கிவைத்தனர். வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை வீரத்துடன் அடக்க காளையர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர், அதே நேரம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான கிராம மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியினை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். முதல் சுற்று நிறைவில் 122 ஜல்லிக்கட்டு காளைகள் களம் கண்டு உள்ளது – பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் என 5பேர் இதுவரை காயம் ஏற்பட்டுள்ளது.