Skip to content
Home » ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது இந்நிலையில் இரவு. இரவு காட்சி திரையிடப்பட்டிருந்தது. அப்போது மது போதையில் படம் பார்த்துக் கொண்டிருந்த இருவர் ஒருவருக்கொருவர் தகராறு செய்து கொண்டு தாக்கிக்கொண்டனர். அதில் அவர்கள் செல்போனை தூக்கி தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருந்த திரையின் மீது வீசி எறிந்ததில் திரைச்சீலை கிழிந்தது. இதனால் உடனடியாக படம் நிறுத்தப்பட்டது இதனால் அதிர்ச்சியடைந்த தியேட்டர் மேலாளர் நாராயணசாமி திரை கிழிய காரணமான 2 பேர் மீதும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செல்போனை தூக்கி எறிந்து தியேட்டர் திரை சீலை கிழிய காரணமான ஜெயங்கொண்டம் அடிபள்ளத் தெருவை சேர்ந்த பிரபு (24) மேலும் அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த இளவரசன் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.