தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவேரி கரையில் ஸ்ரீ ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் சமாதி அமைந்துள்ளது. தியாகராஜர் மறைந்த பகுளபஞ்சமி அன்று ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் தியாகராஜரின் 178 வது ஆராதனை விழா கடந்த 14 தேதி தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாடெங்கும் உள்ள பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்தினார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று நடைபெற்றது. இதில் தியாகராஜரின் முத்தான ஐந்து பஞ்சரத்ன
கீர்த்தனைகளை ஆயிரம் கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் – ஒரே நேரத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள். இதில் பிரபல பாடகர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, OS.அருண், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தியாகராஜர் சிலைக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தியாகராஜர் வாழ்ந்து மறைந்த அவரது இல்லத்தில் இருந்து உஞ்ச விருத்தி நடைபெற்றது. இதில் அவரது சிலைகளை எடுத்து கொண்டு பஜனை பாடல்கள் பாடியவாறு வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவினை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு