Skip to content
Home » ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்..

ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட நேற்று வரை மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வாக்காளர்களை சந்தித்து தங்களுக்கு வாக்களிக்கும்படி தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று முக்கிய கட்சிகளான காங்கிரஸ், அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 7-ந்தேதி கடைசிநாள் ஆகும். 8-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 10-ந்தேதி வேட்பு மனுக்கள் திரும்பப்பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *