விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி , பிடாரிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மனைவி பார்வதி (62))இருவரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக திருச்சி வந்தனர் .பிறகு திருவரங்கம் கீழ அடையாளஞ்சான் தெரு பகுதியில் உள்ள ஒரு அறக்கட்டளை நிறுவனத்தில் தங்கி விட்டு அங்கிருந்து கோவிலுக்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர் பார்வதியை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த பார்வதி திடீரென்று இறந்து போனார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:திறப்புமூச்சுதிணறி பலிவிக்கிரவாண்டிவிழுப்புரம் பெண்விழுப்புரம் மாவட்டம்ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல்