Skip to content
Home » ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில்  பிப்ரவரி 5ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  10ம் தேதி தொடங்கியது.  அதன்பிறகு 13ம் தேதி  வேட்பு மனு தாக்கல் நடந்தது. இரண்டு நாளில் மொத்தம் 9 பேர் வேட்பு மனு தாக்கல்  செய்த நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

இன்று காலை 11 மணிக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி,  தேர்தல் அலுவலகமான   ஈரோடு  மாநகராட்சி அலுவலகம்  சென்று  தேர்தல் அதிகாரியும்,  மாநகராட்சி ஆணையருமான மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  வேட்புமனுவில் தனக்கு   மைக் சின்னம் ஒதுக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக  அவர் தேர்தல் அலுவலகத்தின் முன் உறுதி மொழி எடுத்தார். நாளை வேட்புமனுக்கள்  பரிசீலனை நடக்கிறது. 20ம் தேதி மாலை இறுதி வேட்பாளா்  பட்டியல் வெளியிடப்படும்.