தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது. பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கப்படும் என்ற நிலையில், தங்கத்தின் இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் என கருதி, தங்கத்தை பலரும் இருப்பு வைக்க தொடங்கினார்கள். இந்நிலையில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இறக்குமதி வரி அதிகரிப்பு பற்றி அறிவிப்பு வெளியானது. இதனால் தங்கத்தின் விலை உயர தொடங்கி உள்ளது.
இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800க்கு விற்பனையானது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475க்கு விற்பனையானது. அதேபோல் இன்று மாலை பவுன் ஒன்றுக்கு தங்கம் விலை ரூ.720 அதிகரித்து ரூ.44,040க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,505க்கு விற்பனையானது. ஒரேநாளில் தங்கம் விலை அடுத்தடுத்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டிருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.