Skip to content
Home » காசிமேட்டில் மீனவர் படுகொலை… 8 பேர் கொண்ட கும்பல் கைது….

காசிமேட்டில் மீனவர் படுகொலை… 8 பேர் கொண்ட கும்பல் கைது….

சென்னை  காசிமேட்டில் நாகூரான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் மீன் பிடித் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும், மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வினோத் குமார் நேற்று தனது நண்பருடன் குடித்துவிட்டு வீட்டின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது எட்டு பேர் கொண்ட கும்பல் வினோத்குமாரை தலை மற்றும் முகத்தில் சரமரியாக கத்தியால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார், உயிரிழந்த  வினோத்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் பகுதியை சேர்ந்த யுவ்ராஜ் (19), நரேஷ் குமார்(21), கோகுல்(20) ரித்திக் ரோஷன்(18), சுனில்(19) ,  முத்து (19) உள்ளிட்ட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடந்ந இரண்டு வாரத்திற்கு முன்பு வினோத் குமார் மற்றும் அவரது நண்பர் குமரன் ஆகியோர் நாகூரான் தோட்டம் மசூதி அருகே மது அருந்தி கொண்டிருந்த பொழுது காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அப்போது போலீசாரிடம்  வினோத் குமார் கஞ்சா அடிப்பவர்களை விட்டுவிட்டு எங்களை வந்து ஏன் கேட்கிறாய்? என காவலரிடம் தகராறு செய்துள்ளார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நரேஷ் குமார் வினோத்குமாரிடம் எங்களை ஏன் போலீஸிடம் காட்டிக் கொடுக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளான். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு  பார்க்கில் மது அருந்தி கொண்டிருந்த பொழுது நீங்கள் எல்லாம் இங்கு வரக்கூடாது எனக் கூறி வினோத்குமார் மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.

இதனை அடுத்து வினோத்குமாரை கொலை செய்வதற்காக திட்டமிட்டு சபரிமலைக்கு சென்று நரேஷ் குமார் இரண்டு கத்தியை வாங்கி வந்து, நேற்று இரவு வினோத்குமாரை நோட்டமிட்டு வந்துள்ளனர். அப்பொழுது வினோத்குமார் மதுபோதையில் வீட்டின் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது சரமாரியாக  வெட்டிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளான்.