Skip to content
Home » ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில் 63-வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. போட்டியை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து முதலில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கோவில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் பங்குபெற்ற மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள் பங்குபெற்றன. இவற்றை அடக்க 480 காளையர்கள் களம் கண்டார்கள். போட்டியானது பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றது.

போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளுக்கும் சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், சேர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாட்டிற்கு கார் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைமாடு முட்டியதில் காயமடைந்த குழுமணி அருகே சமுத்திரத்தை சேர்ந்த குழந்தைவேல் 65. (பார்வையாளர் ) திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.