Skip to content
Home » பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

பஸ் பயணம்….டிரைவருடன் காதல்…. உல்லாசம்…. அதன்பின் நடந்த விபரீதம்

தஞ்சை வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன இளம்பெண் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் …… இறந்து போனது தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா(26) என்பது தொிய வந்தது. இவர்  கல்லுாரி முடித்து விட்டு, அரசு தேர்விற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படிப்பதற்காக தினமும், மேல உளூரில் இருந்து தஞ்சாவூருக்கு தனியார் பஸ்சில் வந்து சென்று வந்துள்ளதும், அவரை கடந்த 6ம் தேதி முதல் காணாமல் பெற்றோர், உறவினர்கள் தேடி வந்ததும் தொிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அகல்யாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரணை நடத்திய போது தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த நாகராஜ்(25) என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தொிய வந்தது. இதனை தொடர்ந்து நாகராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நாகராஜ் தனியார் பஸ் டிரைவர். இவரின் பஸ்சில்தான் தினமும் அகல்யா சென்று வந்துள்ளார். அகல்யா வந்து அமர்ந்த உடன் நாகராஜ் காதல் பாட்டு போட்டு அசத்துவாராம்.  இதனால் அகல்யாவும் காதல் வயப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். இந்த காதலின் இடையே பேரிடையாக அகல்யாவிற்கு ஒரு செய்தியை கேள்விபட்டுள்ளார். அது நாகராஜ் ஏற்கனவே திருமணமானவர் என்பதுதான். இதனை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் நாகராஜ் அகல்யாவை திருமணம் செய்து கொள்வதாக சமாதானம் கூறி, தனது லீலையை தொடர்ந்து உள்ளார். அகல்யா தன்னை திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்தவே, அவரை முடித்து விட எண்ணிய நாகராஜ், திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறி காரில் அழைத்து சென்று புதுக்கோடடை சாலை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் துப்பட்டாவால் அகல்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் காரில் உடலை எடுத்துக்கொண்டு வந்து வடசேரி வாய்க்காலில் வீசி சென்றுள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தொிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *