Skip to content
Home » திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்…

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32)இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 21 ந்தேதி ஒட்டலுக்கு பணிக்கு செல்கிறேன் என்று கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை ஜெகநாதன் உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

 

வாலிபர் தற்கொலை…

திருச்சி திருவானைக்காவல் கே கே சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன் குமார். இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்பொழுது அவர் 2 பாடத்தில் அரியர் வைத்து விட்டார். இந்நிலையில் அந்த தேர்வை எழுதுவதற்காக நவீன்குமார் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அரசு காலனியில் ஒரு வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில்
நேற்று நவீன்குமார் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கவில்லை.. இதனை பார்த்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு நந்தகுமார் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. இதையடுத்து தகவல் அறிந்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவீன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.