தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே மீன் பிடி வலையில் முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதலை மீட்கப்பட்டு அணைக்களை முதலைகள் காப்பகத்தில் விடப்பட்டது.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள் மீன் பிடி வலையை விரித்துப் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வலையில் சிறிய முதலை சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடன் இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, வனத் துறையுடன் அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) மீட்புக் குழுவினர் இணைந்து கூடலூர் கிராமத்துக்குச் சென்று மீன் பிடி வலையில் சிக்கிய 3 அடி நீளமுள்ள 2 வயது முதலையை மீட்டனர். பின்னர், கும்பகோணம் அருகே அணைக்கரை முதலைகள் காப்பக வளாகத்தில், மீட்கப்பட்ட முதலை விடப்பட்டது.