Skip to content
Home » கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

கோவை உழவர் சிலை முன்பு பொங்கல் விழா…. பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…

கோவையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள போக்குவரத்து ரவுண்டானா நடுவே உழவு தொழிலையும் உழவர்களையும் போற்றும் விதமாக தனியார் பங்களிப்புடன் உழவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் விவசாயிகளை போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை முன்பாக பொங்கல் விழா தனியார் நிறுவனங்கள் சார்பாக நடைபெற்றது. விழாவில் ஆர் கோல்டு நிறுவனத்தின் இயக்குனர் ரங்கசாமி,ஃபிளேக் ஷிப் மீடியா நிறுவன இயக்குனர்கள் சதீஷ் குமார், மகாபிரபு,கேரட்

லேன் நிறுவன நிர்வாக இயக்குனர் சக்திவேல், பொது மேலாளர் நடராஜன்,திட்ட மேலாளர் சுனில்,ஆல் இந்தியா ரேடியோ ஆனந்த நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

இதில் உழவர் சிலை முன்பாக கரும்பு தோரணங்கள் அமைக்கப்பட்டு அதன் நடுவே பொதுமக்கள் இணைந்து பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் அந்த பகுதி வழியாக வாகனத்தில் சென்ற பொதுமக்கள் மற்றும் கேரளா செல்ல வந்த பயணிகள் என பொதுமக்கள் அனைவரும் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக நடைபெற்ற பொங்கல் விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..