Skip to content
Home » ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற ராட்சாண்டார் திருமலையில் 63-வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது. போட்டியை மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து முதலில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கோவில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

போட்டியில் பங்குபெற்ற மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள் பங்குபெற்றுள்ளன.இவற்றை அடக்க 480 காளையர்கள்  பெயர் பதிவு செய்துள்ளனர்.  பல்வேறு சுற்றுகளாக  போட்டி நடந்து வருகிறது.   முதல் சுற்றிலேயே  அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் காளை   வெற்றி பெற்றது. இந்த காளையை யாரும் பிடிக்கமுடியாததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளுக்கும் சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், சேர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் சிறந்த மாட்டிற்கு கார் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது.