கடந்த 2011 – 2016 அ.தி.மு.க., ஆட்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அமைச்சராக பணியாற்றிய போது வைத்தியலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி., நிறுவனங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்க, 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அந்த லஞ்ச பணத்தை வைத்தியலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, தன் தாய் முத்தம்மாள் பெயரில், மகன்கள் பிரபு, சண்முகபிரபு மற்றும் மைத்துனர் பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனம் வாயிலாக கடனாக பெற்றது போல கணக்கு காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் வைத்திலிங்கம் மற்றும் அவருக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ஜைர். இந்நிலையில், 2002ம் ஆண்டு பண மோசடிதடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
வைத்தியின் ரூ100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
- by Authour