திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(43). இவரது செல்போ னுக்கு கடந்த ஆண்டு ‘வாட்ஸ் ஆப் மூலம் ஒரு
அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசியவர் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும் என்று தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி பேசினார். இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி 3 மாதங்கள் வரை பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சம் வரை மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஒரு
கட்டத்தில் முதலீட்டுக்கான வட்டியை கேட்டபோது செல் போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப் பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி நடந்த சம்பவம் குறித்து மாநகர ‘சைபர் கிரைம்’ போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன் லைன் மூலம் பணம் பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.