திருச்சி அடுத்த சூரியூர் ஜல்லிகட்டு போட்டி பாதுகாப்பு பணியை திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் எஸ்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைதியாக போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் வளநாடு உள்ளிட்ட நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.