Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு….

ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு….

ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பெருமாளை சாமி தரிசனம் செய்ய வந்த வட மாநில பக்தர் ஒருவர் இறந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு

மத்திய பிரேதசம் மாநிலத்தை சேர்ந்தவர் கோபி யாதவ் (62). இவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொர்க்கவாசல் திறப்பில் கலந்து கொள்வதற்காக திருவரங்கம் வருகை புரிந்தார். அவருடன் மகன் முகேஷ் யாதவ் உடன் வந்திருந்தார். இந்த நிலையில் இருவரும் திருவரங்கம் மேலூர் ரோடு தெப்பக்குளம் வாகன நிறுத்தம் அருகில் திடீரென்று கோபி யாதவ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவரது மகன் முகேஷ் யாதவ் ஆபத்தான நிலையில் அவரை திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் கோபி யாதவ் இறந்துவிட்டதாக கூறினார் இந்த சம்பவம் குறித்து முகேஷ் யாதவ் திருவரங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.