Skip to content
Home » பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள வாழைத்தார் மற்றும் பூக்கள் ஏலக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் வி.வி வாழைத்தார் கமிஷன் வண்டியில் பூம்பழம் ஒரு தார் 1,000 ரூபாய்க்கும், ரஸ்தாலி 700 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 800 ரூபாய்க்கும், பச்சநாடன் 600 ரூபாய்க்கும், செவ்வாழை ஒரு பழம் 15 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும்

அதேபோல ஸ்ரீ மாரியம்மன் புஷ்ப வியாபாரிகள் ஏலக்கடைகளில் மல்லிகை பூ ஒரு கிலோ 2,200 ரூபாய்க்கும்,முல்லைப் பூ 2,000 ரூபாய்க்கும்,

செவ்வந்திப்பூ 180 ரூபாய்க்கும், அரளிப்பூ 300 ரூபாய்க்கும், ரோஜாப்பூ 200 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 300 ரூபாய்க்கும், துளசி 4 கட்டு 60 ரூபாய்க்கும், மருவு 4 கட்டு 120 ரூபாய்க்கும் என விற்பனை செய்யப்பட்டது

வாழைத்தார் மற்றும் பூக்கள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரண்டு மடங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விலை உயர்வால் சிரமத்திற்கு உள்ளாகினர்.