Skip to content
Home » தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

தேசபக்தி குறித்து கவர்னர் பேசுவது வேடிக்கை- திமுக எம்.பி. பதிலடி

மேதகு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தன்னிலை மறந்துவிட்டதா? ஆளுநர் எனும் பொறுப்பிற்கு அவமானச் சின்னம் அவர். தமிழக அரசையும், முதலமைச்சரையும் தொடர்ந்து எதிர்க்கும் முகமாக எண்ணும் அவரது போக்கும், தி.மு.க.வுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபடுவதும் அரசியல் சாசன பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதைக் காட்டுகிறது.

அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத ஒரு  அமைப்பின் கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவாற்றுவது வேடிக்கையாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவும் தமிழகமும் எங்கள் இரண்டு  கண்கள் போன்றவை. இரண்டும் சம அளவில் முக்கியமானவை. ஒருவரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் மற்றொருவரை காயப்படுத்துவதில்லை. அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது ஆளுநர் அவர்களே. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பு கண்ணியத்தை நீங்கள் அவமதித்திருக்கும்போது, அந்த அரசியலமைப்பைப் பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. உச்ச நீதிமன்றம் கூட உங்களுக்கு குட்டு வைத்து உங்கள் வேலையைச் சரியாகச் செய்யச் சொல்ல வேண்டியுள்ளது!. மேதகு ஆளுநர் ஆர்.என். ரவியின் இத்தகைய  சட்டவிரோத செயல்களுக்கு ராஜ் பவனில் உள்ள அரசு ஊழியர்கள் உதவுவதைக் கண்டு நான் ஆச்சரியம் கொள்கிறேன். அவர்கள் தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் என்பதையும் அவர்களுக்கு  நினைவூட்ட வேண்டும். இவ்வாறு வில்சன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.