தமிழக அரசானது வளர்ச்சி அடைந்த ஊராட்சிகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக முழுவதும் ஊராட்சிகளை மாநகராட்சியாக்கும் பணிகளில் தீவிரப்படுத்தி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்டகுண்டூர் ஊராட்சியை மாநகராட்சி ஆகும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த குண்டூர் ஊராட்சியில் திருவளர்ச்சிபட்டி ஐயம்பட்டி அயன்புத்தூர் ,பர்மா காலனி என்ன ஐந்து கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய ஊராட்சியாகும் இந்த ஊராட்சியில் சுமார் 7000 வாக்காளர்கள் கொண்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் சுமார் 3000 ஏக்கருக்குமேல் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 500 ஏக்கர் பரப்பளவை கொண்ட ஏரிகள் மூலம் இந்த விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது.
மேலும் கால்நடை வளர்ப்பு பிரதானமாக கொண்டு பால் வியாபாரம் செய்யும் பொதுமக்களே இந்த ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதனையொட்டி அதிகம் ஏழை எளிய மக்களே 100 நாள் வேலையை நம்பி வாழும் மக்களே இப்பகுதியில் வசித்து வருவதாகவும் எனவே குண்டூர் ஊராட்சி மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்று இன்று காலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய மற்றும் 100 நாள் வேலைகளை நம்பி வாழும் எங்களுக்கு மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் எனவே மாநகராட்சிகள் இணைக்கும் பணியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.