Skip to content
Home » 15ம் தேதி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு- மைதானத்தை ஆய்வு செய்தார் எஸ்.பி.

15ம் தேதி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு- மைதானத்தை ஆய்வு செய்தார் எஸ்.பி.

திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் மாட்டு பொங்கல் அன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருப்பதை முன்னிட்டு அதற்கான நடைபெற்று வரும் பணிகளை திருச்சி எஸ் பி செந்தில் நாகரத்தினம் நேரில் ஆய்வு செய்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல்  தினத்தில் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் . இந்த போட்டியில்  திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டும் அதற்கான அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உரிய பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில்  திருச்சி மாவட்ட எஸ்பி செந்தில் நாகரத்தினம் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள  மைதானத்தையும் அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள்ஆகியோருக்கு ஜல்லிக்கட்டு காளைகளால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பு பணி எப்படி செய்யப்பட்டுள்ளது என்பதையும் பார்வை யிட்டார் அப்போது திருவெறும்பூர் ஏ எஸ் பி பனாபத் அரவிந்த், மற்றும் காவலர்களும், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினரும் உடன் இருந்தனர்.