Skip to content
Home » அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தனது தொகுதி வளர்ச்சிக்காக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்சாரத்துறை அமைச்சர்

வி.செந்தில்பாலாஜி, கால்நடைத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோரை சந்தித்து, ஜெயங்கொண்டம் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோரிக்கை கடிதங்களை வழங்கினார்.