சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 24 வருடங்களாக இருமுடி கட்டி சபரி மலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் உலக நன்மை வேண்டியும், உலக ஜீவராசிகள் நோய் – நொடி இன்றி வாழவும், மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிக்கவு வேண்டியும் சபரி மலைக்கு சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். இதேபோல் மூன்றாவது ஆண்டாக கடந்த 8 ஆம் தேதி இருமுடி கட்டி சென்னையில் பயணத்தை தொடங்கி தஞ்சை வழியாக சபரிமலைக்கு செல்கிறார். ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டு வருகிற 13ம் தேதி ஜோதி தரிசனம் காண செல்வதாகவும், மீண்டும் சைக்கிளிலே சொந்த ஊர் திரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.