Skip to content
Home » திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா… தஞ்சை மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை…

திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவினை முன்னிட்டு வரும் 18ம் தேதி (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.