Skip to content
Home » பொங்கல் பண்டிகை…. சூடு பிடித்த மஞ்சள் கொத்து, காய்கறிகள், பூ வியாபாரம்…

பொங்கல் பண்டிகை…. சூடு பிடித்த மஞ்சள் கொத்து, காய்கறிகள், பூ வியாபாரம்…

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகின்ற 14ம் தேதி சூரிய பொங்கலும், 15ம் தேதி உழவர் திருநாளாகவும், 16ம் தேதி காணும் பொங்கலாகவும் ஆகிய மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் அனைத்து வீடுகளிலும் பொங்கலிட்டு இறைவனை வழிபடுவதும், தங்களை வாழ்வித்த உழவுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து அவர்களை போற்றுவதாகவும், சுற்றத்தார் நண்பர்களுடன் இணைந்து அவர்களைக் கண்டு தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளும் காணும் பொங்கல் ஆகவும் இந்த மூன்று நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த மாதம் பெய்த நல்ல மழையால் பயிர்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இப்ப பொங்கல் திருநாளை கொண்டாடத்

 

தயாராகி வருகின்றனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட தற்பொழுது கடைவீதிகளில் திரண்டு வருகின்றனர். கடைவீதிகளில் தற்பொழுது பொங்கல் திருநாளை மக்கள் கொண்டாடும் விதமாக மஞ்சள் கொத்து, காய்கறிகள், பல வகையான பூக்கள், பலவண்ண கோலப்பொடிகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இதில் முக்கியமாக திருமணமான தங்கள் பெண்களுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக பொங்கல் பண்டிகையின் 5ம் நாள் இன்று, பொங்களுக்கு தேவையான பொருட்களைப் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சிலர் கடந்த ஆண்டில் இறந்த மூதாதையர்களை வழிபடவும், மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அரியலூர் கடைத்தெருவில் பரபரப்பாக விற்பனையாகும் இப்பொருட்களினால் கூட்டம் அதிகரித்துள்ளது. காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாண்டு பொங்கலை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.