திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிய பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நிருபர்களை சந்தித்த போது…. உழவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா பொங்கல் விழா மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினாலும் உண்மையிலேயே விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து விவசாயிகள் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். விவசாய இடுபொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டி போட்டு விவசாயிகள் வேதனையில் உள்ளனர். விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக தமிழக விவசாயிகளை அழித்து வரும் காட்டுப்பன்றி போன்ற உயிரினங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது அதற்கு தமிழக விவசாயிகள் சார்பாகவும் மதிமுக சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகநீதி பெண்கள் உரிமை எல்லாருக்கும் எல்லாம் என்ற அனைத்தும் தந்தை பெரியார் கொண்டு வந்ததால் தான். தமிழகம் என்று முன்னேற்றம் அடைந்துள்ளது என்றால் அதற்கு தந்தை பெரியாரை காரணம் இதை யாரும் மறுக்க முடியாது இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்கள் என அனைவரும் தற்பொழுது முன்னேறி உள்ளார்கள் என்றால் அதற்கு பெரியாரின் சமூக நீதிக் கொள்கையை காரணம்
தமிழ் தேசியம் தவறான விஷயம் இல்லை ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது வேதனையான விஷயம் தமிழகம் முழுவதும் திராவிட இயக்கங்கள் இதனை கண்டித்துள்ளனர் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது பதியப்பட்டுள்ளது.
ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்கள் இப்படி செய்வது தவறில்லை. அதை அவர்கள் தான் செய்வார்கள் அவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள்
நாம் தமிழர் இயக்கத்தை பொருத்தவரை அவர்கள் இதை செய்வது வேதனையாக உள்ளது, சீமானுக்கும் நாம் தமிழர் இயக்கத்திற்கும் இது தகுந்தது அல்ல தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகியோர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு நல்ல கருத்துக்களை கூறியுள்ள பெரியாரின் நூல்களை அரசு ஏன் பொதுவுடமை ஆக்க மறுக்கிறது என செய்தியாளர்கள் கேட்ட பொழுது……
பெரியாரின் நூல்களை அரசுடைமை ஆக்க மாட்டோம் என யார் சொன்னார்கள் அப்படி யாரும் எதுவும் சொல்லவில்லை. தந்தை பெரியாருக்கு உண்டான மரியாதையை தமிழக அரசு கொடுத்து வருகிறது. வருடா வருடம் அவருக்கான மரியாதையை திராவிட இயக்கங்கள் செய்து வருகிறது.
அரசுடைமை ஆக்குவதை திராவிட முன்னேற்ற கழக அரசு செய்து கொண்டு தான் வருகின்றனர். தந்தை பெரியாருக்கு உண்டான முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றனர் தந்தை பெரியாரை மதிக்காமல் அவர்கள் இருந்ததில்லை .
விடாமல் செய்தியாளர்….தந்தை பெரியார் எழுதிய நூல்களில் நல்ல கருத்துக்கள் இருக்கும் பொழுது அதை ஏன் அரசுடமை ஆக்காமல் இருக்கிறார்கள் என்ற போது…
தந்தை பெரியாருடையதை அரசுடமையாக்குவோம் என நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் அதை மறுக்க போவதில்லை மறுக்கப் போவதில்லை முதலமைச்சரோ இந்த அரசோ மறுக்கப் போவதில்லை.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணம் தந்தை பெரியாருடைய சமூக நீதிக் கொள்கை என்பதை முதலமைச்சர் அனைத்து இடங்களிலும் கூறிக் கொண்டு வருகிறார். முதலமைச்சர் மட்டுமல்ல திராவிட இயக்கங்களும் அதைத்தான் கூறி வருகிறது. தந்தை பெரியார் இல்லாமல் தமிழகம் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்க முடியாது என்பதில் நாங்கள் அனைவரும் ஒத்த கருத்துடன் உள்ளோம் என்றார்.
பெரியாரைக் கொச்சைப்படுத்துவதில் சீமானுக்கும் அண்ணாமலைக்கும் போட்டி இருக்கிறது இது மிகவும் வருத்தமான விஷயம். அண்ணாமலையை
பொறுத்த வரை தந்தை பெரியார் இல்லை என்றால் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகவே ஆகியிருக்க முடியாது என்றார்.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று அதிகாரத்திற்கு வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் சமூக நீதி இதை அனைத்தும் தெரிந்திருந்தும் தெரியாத மாதிரி அவர்கள் பேசுவது ஏன் என்பது புரியவில்லை….
பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாததற்கும், காலதாமதம் ஆவதற்கும் காரணம் ஒன்றிய அரசு நிதி தராமல், ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தான். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தற்போது தண்டனை கடுமை ஆக்கப்பட்டுள்ளது நான் வரவேற்கிறேன். பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது என பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் கேட்கின்றனர் ….. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் குற்றங்கள் குறைவு என்றார்.
திருச்சி மாநகராட்சி விரிவாக்கத் திட்டத்திற்கு பல கிராமங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் கே என் நேரு எதிர்ப்பு இல்லை என கூறியுள்ளாரே என கேட்டபோது…
நான் பல கிராமங்களுக்கு நன்றி தெரிவித்து போகும் போது சில இடங்களில் மட்டுமே ஆட்சேபனை தெரிவித்தனர். அதுவும் அதிமுகவினர் அவர்களுக்கு தவறான தகவல்களை கொடுத்ததால் மட்டுமே இந்த எதிர்ப்பு இருந்தது. 100 நாள் வேலை திட்டம் இருக்காது, உங்கள் வாழ்வாதாரம் போய்விடும், மாநகராட்சி இணைந்தால் உங்கள் கிராமத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என அவர்களை பலர் குழப்பி விட்டிருந்தனர்.
உங்கள் கிராமம் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டால் உங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டத்தை மாநில அரசு கொண்டுவரும் என நாங்கள் அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளோம். இருப்பினும் ஒரு சில கிராமங்களில் மட்டுமே ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.