Skip to content
Home » சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே இன்று நடந்த விவாதம்

எடப்பாடி பழனிசாமி: பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம் ஆளுநரைக் கண்டித்து நீங்கள் போராட்டம் நடத்தவில்லை.

முதலமைச்சர்: எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். இம்முறை ஆளுநர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம்

எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது

முதலமைச்சர்: எங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ, அங்குதான் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும்.

எடப்பாடி பழனிசாமி: தமிழ்த்தாய் வாழ்த்தை நேரலையில் காட்டவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவ்வளவுதான் மரியாதையா?

சபாநாயகர்: இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லைவ் செய்ய முடியவில்லை. DD அனுமதியின்றி உள்ளே வந்தபோதும் அவர்களை வெளியே அனுப்பினோம். இது குறித்து ஏற்கனவே விளக்கத்தை அளித்துள்ளேன்

எடப்பாடி பழனிசாமி: ஆளுநர் உரையை ஆளுநர் வாசிக்கவில்லை. சபாநாயகர் தமிழில் வாசித்த உரையாகத்தான் கருத முடிகிறது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது.

எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வு ரத்து செய்யப்பபடும் என கூறினீர்கள்.

முதலமைச்சர்: இப்போதும் நிச்சயமாக சொல்கிறோம். எங்கள் கருத்தில் மாற்றம் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்கள் வேலை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு இருக்கும் என ராகுல் காந்தி கூட கூறியிருந்தார்

நாங்கள் இருந்தவரையில் நீட் தேர்வு இல்லை. நீங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு உள்ளே வந்தது.

எடப்பாடி பழனிசாமி: நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்

முதலமைச்சர்: நீங்கள் நான்கு வேடம் போடுபவர்கள்

அமைச்சர் துரை முருகன்: அவர்கள் (அதிமுகவினர்) வெளிநடப்பு செய்யப்போகிறார்கள். அதற்காக தயாராக வந்துள்ளனர்

எடப்பாடி பழனிசாமி: நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் கட்சி நிகழ்ச்சி

முதலமைச்சர்: அது கட்சி நிகழ்ச்சி அல்ல, அரசு நிகழ்ச்சிதான்
தொடர்ந்து நடந்த வாக்குவாதம்..

முதலமைச்சர்: பொள்ளாச்சி வழக்கில் புகார் தந்தவுடன் FIR போடவில்லை; சென்னை மாணவி விவகாரத்தில் புகார் அளித்தவுடன் FIR போடப்பட்டது.

ஈபிஎஸ்: பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் அளித்த அடுத்த 24 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளிகள் 4 பேரில், மூவர் கைது செய்யப்பட்டனர்.

முதலமைச்சர்: புகார் அளிக்கவே 2 வருடம் ஆகியிருக்கிறது; புகார் அளித்த 12 நாட்களுக்கு பிறகுதான் FIR போடப்பட்டுள்ளது.

முதலமைச்சர்: நாளை சபாநாயகரிடம் ஆதாரத்தைத் தருகிறேன்; அவரும் (எடப்பாடி பழனிசாமி) தர வேண்டும்

முதலமைச்சர்: நான் சொல்வதை தவறு என நீங்கள் நிரூபித்தால் நீங்கள் அறி விக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். அதே போல நான் சொல்வது உண்மை என்றால் நீங்கள் தண்டனையை ஏற்பீர்களா?

சபாநாயகர்: நாளை காலை இருவரும் ஆதாரங்களை வழங்குங்கள்; இருவரும் சவால் விட்டிருக்கிறார்கள்; இத்தோடு முடியுங்கள்

ஈபிஎஸ்: நான் சொன்னது தவறாக இருந்தால், நானும் ஏற்றுக் கொள்கிறேன்; பொள்ளாச்சி வழக்கில் 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.பொள்ளாச்சி சம்பவம் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை முதல்வர் தெரிவிக்கிறார்.