Skip to content
Home » கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

  • by Authour

கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரியமான வேஷ்டி சேலைகள் அணிந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்.

கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் பள்ளியின் தாளாளர் மணிவண்ணன் மற்றும் கீதா முன்னிலையில் பொங்கல் விழா துவங்கியது.

நிகழ்ச்சியின் துவக்கமாக சூரியனுக்கு நன்றி சொல்லும் வகையில் பொங்கல் பானைகளை அலங்கரித்து அதில் அரிசி வெல்லம் இட்டு, பொங்கல் பானை பொங்கி வரும் பொழுது பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குழவி கொட்டி சூரியனுக்கு நன்றி செலுத்தினர்.

 

அதனை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் முளைப்பாரி வைத்து நடனம் ஆடினர் பின்னர் ஆசிரியர்களும் தமிழர்களின் பாரம்பரியத்தை பரிசற்றும் விதமாக பாரம்பரிய வேஷ்டி மற்றும் சேலைகள் அணிந்து மாணவ மாணவிகளும் வண்ணமயமாக காட்சியளித்தனர்.

பொங்கலை படையல் இட்ட பிறகு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கிராமத்து பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் போற்றும் வகையில் கோலாட்டம் மயிலாட்டம் சிலம்பாட்டம் கரகாட்டம் பறையாட்டம், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது போல் நடனமாடி மாணவ, மாணவிகள் உற்சாகமாக நடனமாடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.