Skip to content
Home » கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை மற்றும் சிராஜ் நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

அந்த தகவலின் அடிப்படையில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் மற்றும் வனத்துறை பணியாளர்கள் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிராஜ் நகர் பகுதியில் யானை தந்தங்கள் பதிக்க வைத்திருந்ததாக கொளஸ் மைதீன், ரவி வீரன் கிருஷ்ணகுமார், குமார் ஆகிய ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்

விசாரணையில் யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த இடத்தை குற்றவாளிகள் காண்பித்ததை தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு பெரிய யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் ஐந்து பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் . மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் தலைமறைவான நிலையில் அவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.