நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் சார்பாக விழிப்புணர்வு பேரணி திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி நடைபெற்றது. பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையம் முக்கிய சாலைகளின் வழியே கொந்தகை வரை சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது. இவ்விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைமையாசிரியர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளமைய ஒருங்கிப்ணைப்பாளர் சந்தானம், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் வேம்பு,ஆசிரியப் பயிற்றுநர்கள் துர்க்கா,பிரபு,சிறப்பாசிரியர்கள் மற்றும் புதியபாரத எழுத்தறிவுத்திட்ட தன்னார்வலர்கள் கலந்துக் கொண்டனர். இதில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத,படிக்கத் தெரியாதவர்களுக்கு இப்புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த எழுத்தறிவுத்திட்டமானது நம் ஒன்றியத்தில் சுமார் 53 மையங்களில் நடைபெறுகின்றது. 1065 கற்போர்கள் இதில் பயில்கின்றனர். கற்போருக்கு எழுதுப் பொருட்கள் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.