Skip to content
Home » தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சை அருகே ஆபிரகாம் பண்டிதர் நகர் லூர்து நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் சீனிவாசன் (30). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இவருக்கு அரியலூர் மாவட்டம் அலிசிகுடி பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் சுரேஷ் (48) அறிமுகம் ஆகி உள்ளார்.

இதையடுத்து சீனிவாசனிடம் உன்னை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறி கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.5.19 லட்சம் பெற்றுள்ளார். இருப்பினும் கூறியதுபடி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இது குறித்து சீனிவாசன் பலமுறை சுரேஷிடம் கேட்டுள்ளார். இதனால் சீனிவாசனுக்கு ரூ.1.46 லட்சத்தை மட்டும் சுரேஷ் திருப்பி கொடுத்துள்ளார். மீதிப்பணத்தை கேட்டபோது பின்னர் தருகிறேன் என்று கூறியவர் பல மாதங்களாக சாக்குப் போக்கு சொல்லி வந்துள்ளார். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.