சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் செயல்படுத்தி நிதியை முறைகேடு செய்ததாகவும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் சிலரை சாதிப் பெயர் கூறி திட்டியதாகவும் கருப்பூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குக்கு துணைவேந்தர் தரப்பில் இடைக்கால தடை பெறப்பட்டது. இந்த தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவிட்டது.