தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அய்யம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் திமுக அய்யம் பேட்டை பேரூர் கழகச் செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா தலைமை வகித்தார். மகளிரணியினர் புதுப் பானையில் பொங்கலிட்டுப் வாழ்த்தினை பகிர்ந்துக் கொண்டனர் . முன்னதாக தொகுதி ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா வரவேற்றார். அஞ்சுமன் அறிவகம் நிறுவனர் ஜபருல்லாஹ், அரிமாச் சங்க மாவட்டத் தலைவர் சுப்பராமன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கோவிந்தராமன், பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன், பேரூராட்சி பணி நியமனக் குழு உறுப்பினர் தஸ்லீமாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முஸ்லீம் பரிபாலன ஜமாத் சபைத் தலைவர் முஹமதுநஜீப் , புனித தேவாலய அருட்சகோதரர் டென்னிஸ், வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டு விழாப் பேருரை நிகழ்த்தினர். இதில் கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், வணிகர்கள், பொதுமக்கள் உட்பட கலந்துக் கொண்டனர். பேரூர் திமுக மகளிரணி அமைப்பாளர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருமங்கலக்குடி அஸ்-ஸலாம் பொறியியல் கல்லூரியில் பொங்கல் திருவிழா நடந்தது.
கிராமத் திருவிழா” என்ற பெயரில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் மாணவர்கள் பாரம்பரிய உடையில் பானை உடைத்தல், சிலம்பம், கரகாட்டம்
உள்ளிட்டவற்றை நிகழ்த்தினர். மேலும் உரல் இடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.