Skip to content
Home » கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

கவர்னர் ரவியை நீக்கவேண்டும்- உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழக கவர்னர் ரவி  சட்டமன்றத்தில்  உரையை படிக்காமல்   இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும் செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.  கடந்த 6ம் தேதி சட்டமன்றத்திற்கு வந்த  கவர்னர் ரவி, உரையை படிக்காமல் வெளியேறி விட்டார்.

கவர்னரை கண்டித்து  தமிழகத்தில்  பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர்  பொதுநல வழக்கு  தொடர்ந்துள்ளார்.  கவர்னர் அரசியல் சாசனததை  மீறி நடந்து வருகிறார் எனவே அவரை நீக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.