ஸ்ரீரங்கம், தெப்பக்குளம் இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (37). இவர் கிராம நிர்வாக அலுவலரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய கணவர் செல்வகுமார் (வயது 43. )மது பழக்கத்திற்கு அடிமையானவர் இந்த நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம்.இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் மயங்கி விழுந்த செல்வகுமாரை ஆபத்தான நிலையில் திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் செல்வகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் கடையில் ரூ 50 ஆயிரம் பொருட்கள்,பணம் திருட்டு…
திருச்சி திருவானைக்காவல் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மனைவி கோதண்ட ராமானுஜம். இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த 6ம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மர்ம அசாமிகள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 23,000 பணம் மற்றும் ஸ்மார்ட் போன்,ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் ஆகும். இச்சம்பவம் குறித்து கோதண்டராமானுஜம் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.