Skip to content
Home » கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

  • by Authour

கரூர் ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தின் முடிவில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் பேட்டி.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அமைந்துள்ள ஆர்.டி.மலை கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 16.01.2025 அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் அரசு அலுவலர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள் முன்னரே விழா கமிட்டி இடம் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும், மேலும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? என்பதை விழா அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும், விழாவில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு ஊக்க மருந்து மற்றும் எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது.

காளைகள் வாடி வாசலை கடந்த பிறகு குறிப்பிட்ட தூரத்தை கடந்த பிறகு மாட்டின் உரிமையாளர்கள் அதனை பிடிப்பதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலர்களும் ஒவ்வொரு பணிகளை பார்த்துக் கொள்ள வேண்டும். மாடுகளை துன்புறுத்தக் கூடாது. மாடுகளுக்கு ஊக்க மருந்து மற்றும் மாடுகளுக்கு சேதாரம் ஏற்படுத்தும் வகையில் வீரர்கள் நடந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் விழா ஏற்பாட்டாளர் அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு விழாவில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். சிறந்த மாட்டிற்கு கார் பரிசும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் செய்து வருகின்றனர். தற்போது தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினர்.