திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா ஜன.10-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்புவிழாவை முன்னிட்டு ஜன.9-ம் தேதி மதியம் 2 மணி முதல் ஜன.11-ம் தேதி மதியம் 2 மணி வரை திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
நகரப்பேருந்துகள்:
அதன்படி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்களிலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்துகள் அண்ணாசிலை, ஓடத்துறை பாலம், மாம்பழச்சால, காந்தி ரோடு, ஜெஏசி கார்னர், இவிஎஸ் சாலை, ஸ்ரீரங்கம் பேரந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, பின், ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவிரி பாலம், ஓடத்துறை வழியாக செல்ல வேண்டும்.
சத்திரத்திலிருந்து லால்குடி மண்ணச்சநல்லூர் மார்க்கமாக செல்லும் நகரப் பேருந்துகள் அண்ணாசிலை, ஓடத்துறை பாலம், மாம்பழச்சாலை, திருவானைக்காவல் டிரங்க் ரோடு, சோதனைச் சாவடி எண் 6 (சிபி-6), கொள்ளிடம் பாலம் வழியாவும், திரும்பி வரும்போது, திருவானைக்காவல் டிரங்க் ரோடு வழியாக வரவேண்டும். ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை.
அரசு சிறப்பு பேருந்துகள் தேவைக்கேற்ப மட்டுமே ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் வரவேண்டும். கூடுதலாக வரும் பேருந்துகள் காவல் சோதனைச் சாவடி 6 அருகில் நிறுத்த வேண்டும்.
புறநகர் பேருந்துகள் சென்னை, அரியலூர், பெரம்பலூர், துறையூர், கடலூர் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் சிபி-6ல் இருந்து திருவானைக்காவல் வரக்கூடாது. சென்னை புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் செல்ல வேண்டும். சத்திரத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் ஓடத்துறை ஓயாமரி வழியாக சென்னை புறவழிச்சாலையில் செல்ல வேண்டும்.
ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
பக்தர்களின் வாகனங்கள்:
கோயிலுக்கு வரும் மிக முக்கிய நபர்கள் மாம்பழச்சாலை, அம்மா மண்டபம் ரோடு, ராகவேந்திரா ஆர்ச், பீட்-38 வந்து மேலவாசல் வழியாக மேல சித்திரை வீதி, மேல உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, கிழக்கு உத்திர வீதி, ரங்கா ரங்கா கோபுரம் வந்து மிக முக்கிய விருந்தினர்களை இறக்கி விட்டு மீண்டும் கிழக்கு உத்திர வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
முக்கிய நபர்களுக்கான அனுமதி சான்று உள்ள வாகனங்கள் மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மேலவாசல் வழியாக வந்து மேற்கு, வடக்கு, தெற்கு சித்திரை வீதியில் நிறுத்த வேண்டும். பின் வடக்கு சித்திரை வீதி வழியாக வடக்கு வாசல் சென்று பஞ்சக்கரை வழியாக வெளியேற வேண்டும்.
இதர வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள், அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மேல வாசல் அருகில் மூலத்தோப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் நெடுந்தெரு மந்தை, தசாவதாரம் சன்னதி வழியாக பஞ்சக்கரை வழியாக செல்ல வேண்டும்.
குடியிருப்போர் வாகனங்கள் உத்தர வீதி, சித்திரை வீதியில் குடியிருப்போருக்கான வாகனங்கள் அனத்தும் கிழக்கு, வடக்கு சித்திரை வீதியில் நிறுத்த வேண்டும். காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் கீழ சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதியில் மட்டும் நிறுத்த வேண்டும்.
வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள்:
பேருந்துகள் பால்பண்ணை-சஞ்சீவிநகர் சந்திப்பு – ஒய் ரோடு சந்திப்பு, வாகவல் சிபி-6, பஞ்சக்கரை வழியாக கொள்ளிடக்கரை வான நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிரில்) வாகனத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
வேன்கள், கார்களில் வரும் பக்தர்கள் ஓடத்துறை பாலம், காவிரி பாலம், மாம்பழச்சாலை, திருவானைக்காவல், ஸ்ரீ ஓட்டல், அம்பேத்கர் நகர், சங்கர் நகர் வழியாக சிங்கப்பெருமாள் கோயில் மைதானத்தில் வேன்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்துக்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின் அதே வழியே திரும்ப வேண்டும்.
இருசக்கர வாகனங்களுக்கு 3 வழி:
இருசக்கர வாகனங்கள் மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, தெப்பக்குளம் வாகன நிறுத்துமிடத்தில் வந்து திரும்ப வேண்டும். மாம்பழச்சாலை திருவானைக்காவல் ஜங்ஷன், நெல்சன் ரோடு, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மைதானம் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி, பஞ்சக்கரை வழியாக வெளியேற வேண்டும்.
கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு, பஞ்சக்கரை ரோடு, யாத்திர நிவாஸ், கொள்ளிடம் முருகன் கோயில் தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி, பின் அதே வழியாக வெளியேற வேண்டும்.
ஆட்டோக்களுக்கு இருவழி:
மூன்று சக்கர வாகனங்கள் மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு அதேவழியாக திரும்ப வேண்டும். கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு, யாத்திரி நிவாஸ், தசாவதார சன்னதி, நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்தி, திரும்ப வேண்டும். பக்தர்கள் தங்களது கார், இருசக்கர வாகனங்களை சித்திரை, உத்திர வீதிகளில் நிறுத்த அனுமதியில்லை.