Skip to content
Home » கவர்னர் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு கண்டனம்

கவர்னர் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு கண்டனம்

  • by Authour

தமிழக சட்டமன்றம் கடந்த 6ம் தேதி  கூடியது. அன்று கவர்னர்  உரை நிகழ்த்த வந்தார்.   அப்போது அவர்  திடீரென வெளியேறினார்.  இது தொடர்பாக  சபாநாயகர் இன்று சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து சபாநாயகர் கூறியதாவது: கவர்னர்  தமிழக மக்களை அவமதித்து விட்டார்.  தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்ற  சொல்ல கவர்னருக்கு  அதிகாரம் இல்லை.   எழுதி கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் அவரது வேலை. அவர் கோரிக்கை எதுவும் வைக்க முடியாது. சட்டமன்றத்தில் இருந்து கவர்னர் வெளியேற  அதிமுகவினரே காரணம்  கவர்னருக்கு எதிராக அவர்கள் தான் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிர்பபு தெரிவித்துஅதிமுகவினர்  எழுந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்ற வேண்டும் என  அவை முன்னவர் அமைச்சர்  துரைமுருகன் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து  அதிமுகவினர் கூச்சல் போட்டதால் அவர்கள் மீது  உரிமை மீறல்  விவாரணை நடத்த வேண்டும் , உரிமைக்குழுவுக்கு இந்த பிரச்னை அனுப்பப்படும் என   உத்தரவிட்ட  சபாநாயகர், அதிமுகவினரை வெளியேற்றவும் உத்தரவிட்டார்.

அப்போது   முதல்வர் ஸ்டாலின் எழுந்து,   அதிமுகவினர் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார்.  இதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அதிமுகவினர் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்தார்.