கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி அமராவதி ஆற்றை ஒட்டிய தனியார் பட்டா நிலத்தில் கடந்த 15 நாட்களாக சவுட்டு மண் எடுப்பதாகக் கூறி மணல் திருடப்படுவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லாரியை போலீசில் பிடித்து கொடுத்த நிலையில் போலீசார் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சணப்பிரட்டி கிராமத்தின் வழியாக வந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் லாரி
டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமூக அலுவலர் குணசேகரன், கரூர் மாவட்டம் உட்பட 13 மாவட்டங்களில் மதுரை உயர்நீதிமன்ற கிளை சவுடு மண், மணல், கிராவல் மணல், எடுப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில் கரூர் சணப்பிரட்டியில் புல எண் 71, 72, 73 ஆகிய அமராவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள இடங்களில் தனியார் பட்டாநிலமான இந்த இடத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சவுடு மணல் என பெயரில் மணலை திருடி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும் கடந்த 15 நாட்களாக நாள் ஒன்றுக்கு 15 டிப்பர் லாரிகள் மூலம் மணல் திருடப்படுவதாகவும், இன்னும் அந்த பட்டா நிலத்தில் டிப்பர் லாரியும், பொக்ளின் இயந்திரங்களும் நிற்பதால் போலீசார் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.