Skip to content
Home » அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

டங்ஸ்டன் தடுப்போம் மேலூரை காப்போம்,   என்ற வாசகங்கள் அடங்கிய முக கவசம் அணிந்தபடி  அதிமுகவினர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தனர்.  இதற்கு  பதிலளித்து  நிதித்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியதாவது:

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு  அனுமதி வழங்க  மாட்டோம்.   முதல்வர் ஸ்டாலின் இருக்கும்வரை ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாது. அதிமுக  செய்த தவறை மறைக்க அதிமுகவினர் முக கவசம் அணிந்து வந்து உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: அதிமுக எம்.பி. தம்பிதுரை  டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவாக   மாநிலங்களவையில் பேசியதால் தான் இந்த பிரச்சனை வந்தது.