கோவை, பேரூர் தீத்திபாளையம் அடுத்த கரடிமடை ஐயா சாமி கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு கோயிலுக்கு செல்லும் பாதை வழியாக ஊர்ந்து வந்து உள்ளது. அதனைப் பார்த்த விவசாயிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் உடனடியாக
மதுக்கரை வனச்சரக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த வனத் துறையினர் மலைப் பாம்பை லாவகமாக பிடித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.