Skip to content

கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு?….

  • by Authour
மதகஜராஜா’ ரிலீஸை முன்னிட்டு நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே வேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் ‘மதகஜராஜா’வை தயாரித்தது.

படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளனர். ‘மதகஜராஜா’வை சுருக்கமாக ‘எம்.ஜி.ஆர்’ என்று அழைத்து வந்தனர். இப்போது வரும், அப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி சாத்தியமாகியுள்ளது. அதன்படி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விஷால், சுந்தர்.சி, விஜய் ஆண்டனி ஆகியோர் படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 3 பேரும் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் படம் குறித்து பேசினார். வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஒருவித நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் விஷால் பேசினார். அதில், “இந்த வருடம் சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ என்று தெரியாது. ஆனால், சிறந்த பாடகர் விருது கிடைக்கும்” என்று பேசி கலகலப்பூட்டினார்.

error: Content is protected !!