Skip to content

தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு மற்றும் பாஜக மகளிரணியினர் கைது செய்யப்பட்டு மதுரை சிம்மக்கல்  ஒர்க்ஷாப் சாலை பகுதியில் உள்ள ஆட்டுமந்தை மண்டபத்தில் காலை 11.30 மணி அளவில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஆறரை மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

மதுரை மேற்கு கிராம உதவியாளர் ஜலபதி அளித்த புகாரின் அடிப்படையில் மதுரையில் தடையை மீறி பேரணி நடத்திய குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அண்ணாபல்கலை மாணவி பாலியல் துண்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்திய பாமகவை சேர்ந்த செளமியா அன்புமணி உட்பட 271 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!