Skip to content

சதுரங்க விளையாட்டு வீராங்கனை சர்வாணிகா குவைத் போட்டியில் பங்கேற்க நிதிஉதவி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை செல்வி. சர்வாணிகாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தன்விருப்ப நிதி காசோலையினை வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை செல்வி. சர்வாணிகாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தன்விருப்ப நிதியிலிருந்து காசோலையினை இன்று வழங்கினார்.

குவைத் நாட்டில் 05.01.2025 முதல் 13.05.2025 நடைபெற உள்ள மாபெரும் FIDE RATED OPEN CHESS TOURNAMENT-களில் ஆசியாவின் மிக இளம் வயது WOMEN CANDIDATE MASTER அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க சாம்பியன் செல்வி. சர்வாணிகா (வயது 9) அவர்கள் இந்தியா சார்பில் வயது

வரம்பற்றோர் பிரிவில் கலந்துகொண்டு விளையாட உள்ளதை தொடர்ந்து இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.25,000/-க்கான காசோலையினை வழங்கி, போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், செல்வி சர்வாணிகா அவர்களின் பெற்றோர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!