Skip to content

எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

  • by Authour

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்  (நிஃப்டெம்), இன்றும் நாளையும்,   வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை நடக்கிறது. இதனை  தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில், அரசு, தொழில், விவசாயம் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த  வல்லுநர்கள் பங்குகொண்டு, உணவு பதப்படுத்துதலில் தொழில்நுட்ப வளர்ச்சி, ஸ்டார்ட்-அப்களை செயல்படுத்துதல், திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு உருவாக்கம், சந்தை மற்றும் ஏற்றுமதி மேம்பாடு, திட்டமிடல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கான வேளாண் தொழில்துறை மற்றும் விவசாய-உணவு சார் தொழில்துறை நிறுவனங்கள், மேம்படுத்த நிதியளித்தல் உட்பட பல தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற உள்ளன.

கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய துறைகளை காட்சிப்படுத்தும் ஸ்டால்கள் இடம்பெறவுள்ளது.
இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், டி ஆர் பி ராஜா, தஞ்சாவூர் எம் பி . ச.முரசொலி , எம்எல்ஏக்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் டி கே ஜி நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசுவதற்காக எழுந்து வந்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மைக் முன்பு வந்தவுடன் தான் பேசுவதற்கான குறிப்பு பேப்பர் இல்லாததால் எங்கய்யா போனான் அவன். பரசுராமன் எங்கே? என்றார்

அதற்குள்  உதவியாளர்  பேப்பருடன் ஓடிவந்தார்…. அவரைப்பார்த்து அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம்,  எருமை மாடா நீ ? பேப்பர் எங்கே என  கேட்டார்.

உதவியாளர் அந்த பேப்பரை கொடுத்ததும் அதை வாங்கி  அப்படியே  அவர் மீது வீசி  எறிந்தார். அந்த பேப்பரயைும் எடுத்துக்கொண்டு  வேகமாக சென்று விட்டார் உதவியாளார்.

விழா மேடையில் அனைவரின்  முன்பும்  உதவியாளரை அமைச்சர்  கண்ணியக்குறைவான  வார்த்தைகளால்  திட்டியதை கேட்ட மற்ற  விருந்தினர்கள், பார்வையாளர்கள் அனைவரும் அமைச்சரின் செயலால் முகம் சுளித்தனர்.

 

 

error: Content is protected !!