இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது:
இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது.
படிம எரிபொருள்களை எரிப்பதால் புவிவெப்பமடைதல் நடக்கிறது. அத்துடன் இல்லாமல், கூடுதல் வெப்பமானது வளிமண்டலத்திலும், கடல்பரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கதகதப்பான காற்றால் கூடுதலாக ஈரப்பதத்தை ஈர்க்க முடியும். கடல் வெப்பமடைதலால் கூடுதலாக அதிலிருந்து நீராவி கடத்தப்படும். இதனால் அதீத கனமழை சம்பவங்கள் அதிகரிக்கும்.
எனவே, படிம எரிபொருள்கள் எரிப்பதை நிறுத்த வேண்டும். 2025 ம் ஆண்டுக்கான மிக முக்கியமான உறுதிமொழியாக படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து மாற்று எரிபொருள் பயன்பாட்டை நோக்கி நகர்தல் இருக்க வேண்டும். அப்போதுதான், உலகை பாதுகாப்பான, நிலையான வசிப்பிடமாக மாற்ற வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.